உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு வகுப்புகள் பள்ளிகள் ஆயத்தம்

சிறப்பு வகுப்புகள் பள்ளிகள் ஆயத்தம்

திருப்பூர்:சனிக்கிழமைதோறும், பள்ளிகளுக்கு முழுமையாக விடுமுறை இருந்தாலும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் காலை, மாலை மட்டுமின்றி, சனிக்கிழமைகள் தோறும் சிறப்பு வகுப்பு நடத்த தலைமையாசிரியர்கள் ஆயத்தமாகி உள்ளனர். அன்றைய தினம், ஏதேனும் ஒரு பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வு, 2026ல், மார்ச் 2ம் தேதி துவங்கி மார்ச் 26ம் தேதி நிறைவடைய உள்ளது. இவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்., 9ம் தேதி துவங்கி 16ல் முடிகிறது. அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்., 6 வரை நடத்தப்படுகிறது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்யும் பொருட்டு, பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் காலை மற்றும் மாலை மட்டுமின்றி சனிக்கிழமைதோறும், சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்பு பெரிதும் பயன்படும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்க முடியும். அதேநேரம், சில பள்ளிகளில், தொலைதுார பகுதிகளில் இருந்து வருவது, நேரமின்மை உட்பட பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டி ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பது சிரமம் என்று கூறுகின்றனர். இவ்வாறு, தலைமையாசிரியர்கள்க கூறினர். -- கொண்டைக்கடலை சாகுபடி சிறக்குமா? திருப்பூர், நவ. 10- வடகிழக்கு பருவமழை சீசனில், மேற்கொள்ளப்படும் மானாவாரி சாகுபடி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள களிமண் நிலங்களில், இந்த சீசனில், கொண்டைக்கடலை, அதிக பரப்பில், சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இச்சாகுபடிக்கு, விதைப்பின் போது மழை, செடியின் வளர்ச்சி தருணத்தில், பனிப்பொழிவு, பூ பிடிக்கும் தருணத்தில், கீழ்திசை காற்று என பருவ நிலையும் ஒத்து போவது அவசியமாகும். இவ்வாறு, பருவநிலை ஒத்துழைத்தால், ஏக்கருக்கு, 700 முதல் 800 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். பிற பகுதிகளில், பெரும்பாலும், இவ்வகை கடலை விளைவது இல்லை. மாவட்டத்தில் சில வட்டாரங்களில் மட்டும், பிரத்யேக சாகுபடியாக இருந்த, கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு, கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து விட்டது. இந்தாண்டும், இவ்வகை சாகுபடியை தேடும் நிலை உருவாகி விட்டது. இருப்பினும், சில பகுதிகளில், கொண்டைக்கடலை விதைப்புக்காக, விளைநிலத்தை உழவு செய்து, தயார் நிலையில் வைத்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: கொண்டைக்கடலை முன்பு, 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், சாகுபடியாகி வந்தது. பருவநிலை மாற்றத்தால், செடிகளில், நோய்த்தாக்குதல் அதிகரித்து, ஆறுக்கும் அதிகமான முறை மருந்து தெளிக்க வேண்டிய நிலை உருவானது. இதனால், சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்தது. மேலும், களையெடுத்தல் பணிக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. செடிகளில் ஒரு வகை, புளிப்புத்தன்மை இருக்கும் என்பதால், காலை, 9:00 மணிக்குள், அறுவடை செய்ய வேண்டும். இப்பணிக்கும் ஆட்கள் கிடைப்தில்லை. இவ்வாறு, சாகுபடி முழுவதும் போராடினாலும், ஏக்கருக்கு, 300 கிலோ விளைச்சல் கிடைப்பதே அரிதாகி விட்டது. அறுவடையின் போது, இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால், விலையும் கிடைப்பதில்லை. எனவே, ஒவ்வொரு ஆண்டும், கொண்டைக்கடலை சாகுபடியில், ஏக்கருக்கு, 10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள், சாகுபடியை கைவிட்டு விட்டனர். நடப்பாண்டும் குறைவான பரப்பிலேயே கொண்டைக்கடலை விதைப்பு செய்ய வாய்ப்புள்ளது. கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு மீண்டும் அதிகரிக்க, வேளாண்துறை உதவ வேண்டும். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை