உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்வர்களுக்கான சிறப்பு ேஹாமம்

தேர்வர்களுக்கான சிறப்பு ேஹாமம்

உடுமலை; உடுமலை, ருத்தரப்ப நகர் சித்தி விநாயகர் கோவிலில் பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கான, சிறப்பு ேஹாமம் பிப்., 2ம் தேதி நடக்கிறது.உடுமலை ருத்தரப்ப நகர் சித்தி விநாயகர், விசாலாட்சி அம்மன் உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி அம்மன் கோவிலில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டிதேர்வு எழுதுவோருக்கான சிறப்பு ேஹாமம் பிப்., 2ம் தேதி நடக்கிறது.லட்சுமி ஹயக்ரீவர், ஞான மகாசரஸ்வதி, யோகமேதா தட்சிணாமூர்த்தி சிறப்பு வழிபாட்டுடன் காலை, 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ேஹாமம் நடக்கிறது. ேஹாமத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், நாளை, 31ம் தேதிக்குள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ