உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம்; விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு

மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம்; விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு

உடுமலை : மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சிறப்புத்திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விதை, உரம் ஆகிய தொகுப்பை பெற்று பயன்பெறுமாறு, உடுமலை வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:தமிழக அரசு மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்துறை வாயிலாக, தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், சிறப்புத்திட்டம் செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, ரூ.6 ஆயிரம் மதிப்பிலான, 10 கிலோ மக்காச்சோளம் விதை, அசோஸ்பைரில்லம், 500 மில்லி, பாஸ்போ பாக்டீரியா, 500 மில்லி, நானோ யூரியா, 500 மில்லி மற்றும் இயற்கை உரம், 12.5 கிலோ அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.உடுமலை வட்டாரத்திற்கு, 297 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடிக்கு, இத்தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சாளையூர், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையங்களில், மக்காச்சோளம் தொகுப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள், இந்த தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.மக்காச்சோளம் சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள், விதைப்புக்கு, 10 நாட்களுக்கு முன், வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும்.நடவு செய்வதற்கு முன், உயிர் உரங்களை, மக்கிய தொழு உரத்துடன் கலந்து, நிலத்தில் இட்டு, 2 அடிக்கு, ஒன்றரை அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.மேலும், வேளாண் விரிவாக்க மையங்களில், மற்ற மானிய திட்டங்களின் கீழ், நுண்ணுாட்ட உரங்களை பெற்றும், சாகுபடி மேற்கொள்ளலாம்.இந்த தொகுப்பில் வழங்கப்படும் நானோ யூரியாவை, ஒரு டேங்க் தண்ணீருக்கு, ஒரு மூடி வீதம் கலந்து, இலை வழியாக தெளித்து, யூரியா உரம் மண்ணில் போடுவதை தவிர்த்து சாகுபடி மேற்கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ