உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு சிறப்பு விளையாட்டு பயிற்சி

மாணவர்களுக்கு சிறப்பு விளையாட்டு பயிற்சி

உடுமலை; காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டன.காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மாலை நேரம் சிறப்பு விளையாட்டு பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது. துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்கான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. நாள்தோறும் தொடர்ந்து வழங்குவதற்கும் பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்தனர்.கடந்தாண்டில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயன், கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார். ஆசிரியர் சையதுமுகம்மது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை