உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேகத்தடையுடன் தடுப்பு; விபத்துகளுக்கு அச்சாரம்

வேகத்தடையுடன் தடுப்பு; விபத்துகளுக்கு அச்சாரம்

அவிநாசி; அவிநாசியில் வேகத்தடையுடன் தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளதால், விபத்துகள் நேர்வதற்கு அச்சாரமாக அமைகிறது. அவிநாசியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. சூளை முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ஆக்கிரமிப்பால் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் நோக்கிலும் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து சில பகுதிகளில் வேகத்தடையும், சில இடங்களில் தடுப்புகளும் வைத்தனர். இதனால் வாகனங்களின் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர் விபத்துகளால், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஆனால், முன்பு வைக்கப்பட்ட தடுப்புகள் அகற் றப்படாமல், வேகத்தடையும் ஒரே இடத்தில் உள்ளதால் வாகனங்கள் அந்தப் பகுதியில் வேகத்தை குறைத்து கடக்கும் போது, வாகனங்கள் தேங்கி நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகராட்சி அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு போடப்பட்டுள்ள வேகத்தடைகள் சற்று உயரமாக உள்ளதால், வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. காமராஜர் நகர் செல்லும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மையத்தடுப்புகளை சிலர் தங்கள் இஷ்டம் போல் இடம் மாற்றி வைத்துக்கொள்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மையத் தடுப்புகளை அகற்றிவிட்டு நிரந்தரமாக அங்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். வேகத்தடைகள் உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மையத்தடுப்புகளை அகற்றி வாகனங்கள் சீரான வேகத்தில் போக்குவரத்து நெரிசல் இன்றி கடக்கவும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை