உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நம் ஆன்மாவை அறிந்து கொள்ளுதலே ஆன்மிகம்

நம் ஆன்மாவை அறிந்து கொள்ளுதலே ஆன்மிகம்

திருப்பூர்; ''நம்மிடம் உள்ள ஆன்மாவைத் தேடி அறிந்துகொள்ளுதலே ஆன்மிகம்'' என்று உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் பேசினார்.திருப்பூர் பத்மாவதிபுரம் சிங்கார வேலன் நகரில் புதிதாக கட்டியுள்ள அறிவுத் திருக்கோவில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.திருப்பூர் மனவளக்கலை அறக்கட்டளை சார்பில், பத்மாவதிபுரம் சிங்காரவேலன் நகரில் அமைக்கப்பட்டுள்ள அறிவுத் திருக்கோவில் திறப்புவிழா நேற்று நடந்தது. அறக்கட்டளை செயலா ளர் முரளி வரவேற்றார். உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர், தி சென்னை சில்க்ஸ் ஆறுமுகம் தலைமை வகித்தார். உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் கொடியேற்றி வைத்து, அறிவுத் திருக்கோவிலை திறந்து வைத்து பேசியதாவது:வேதாத்திரி மகரிஷி எளிய வகை பயிற்சி மூலம் தியானத்தையும், இறை நிலையை உணரும் வழியையும் கற்பித்தார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இதைப் பின்பற்றி வருகின்றனர். அதிகம் படித்தோர், அதிக வசதி படைத்தோர் மத்தியில் ஆன்மிகம் குறித்த புரிதல் குறைவாக உள்ளது.அதே சமயம், அதிகம் படிக்காதோர், அதிக வசதி இல்லாதோர் மத்தியில், ஆன்மிகம் குறித்த புரிதல் அதிகம் உள்ளது. இதன் மூலம் நாம் அறிய வேண்டியது, ஆன்மிகம் என்பது வெளியே ஒன்றை புதிதாக தேடிச் சென்று காண்பது என்பதில்லை.நமக்கு உள்ளே உள்ள ஆன்மாவைத் தேடி அறிந்து கொள்ளுதல் என்பது தான் ஆன்மிகம். எண்ணங்களை பக்குவப்படுத்தி, துாய்மைப் படுத்தி, சீர் படுத்தி பண்படுத்தி, உயர்த்தி, செயலாற்ற வேண்டும். நல்லது கெட்டதை உணர்ந்து அறிந்து நடக்க வேண்டும்.இன்று நமக்கு அமைந்துள்ள வாழ்க்கை இறை அருளால் கிடைத்தது. அதை நல்ல முறையில், யாருக்கேனும் பயனுள்ள வகையில் அற வாழ்க்கை வாழ வேண்டும்.இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை. துன்பத்தில் பாடம் கற்று அதை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, மயிலானந்தன் பேசினார். துணைத்தலைவர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், அறிவுத்திருக்கோவிலுக்கான இடம் வழங்கிய குடும்பத்தினர் மற்றும் நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.இரண்டாவது அமர்வில், உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் ஸ்கை சுந்தரராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார், விஜயலட்சுமி குருசாமி, திருப்பூர் மண்டல பொருளாளர் ராஜாராம், கட்டட வடிவமைப்பாளர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளாசி வழங்கினார். அறக்கட்டளை பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.மூன்றாவது அமர்வாக, விஸ்வநாதன் குழுவினரின் வேதாத்திரியம் கும்மி நிகழ்வு நடந்தது. கிராமிய சேவை திட்ட இயக்குநர் முருகானந்தம் தலைமை வகித்தார். விஸ்வநாதன் நன்றி கூறினார்.நான்காவது அமர்வில், உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் ராம்ராஜ் காட்டன் நாகராஜன் தலைமை வகித்தார்.பிரித்வி நிறுவனர் பாலன், மண்டல குழு தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் சாந்தி,வால்ரஸ் டேவிட், ஜே.வி., குழுமம் பழனிசாமி; எஸ்.கே.எல்., குழுமம்கோவிந்தராஜ், சந்தோஷ் கார்மென்ட்ஸ் சந்திரமோகன், உலக சமுதாய சேவா சங்க பொது செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர்.பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அறக்கட்டளை துணை தலைவர் பூபதிராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை