விளையாட்டு விருது விண்ணப்பிக்கலாம்
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் அறிக்கை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், சர்வதேச, தேசிய அளவில் பதக்கம் பெற்று சிறந்து விளங்கும் தலா இரண்டு ஆண்கள், பெண்கள், பயிற்சியாளர், உடற்கல்வி இயக்குனர் அல்லது உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோருக்கு, மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.வழிமுறை மற்றும் விபரங்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் உள்ளது. விண்ணப்பங்களை, நவ., 15க்குள்,' உறுப்பினர் செயலர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை 600 003' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.