வேலை உறுதி திட்டத்தில் விளையாட்டு மையம்
உடுமலை; உடுமலை ஒன்றியத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிராமப்பகுதி இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கான மைதானம் அமைப்பதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஒன்றியத்தில் உள்ள, 38 ஊராட்சிகளிலும் இடவசதி அடிப்படையில், 'ஏ', 'பி', 'சி' என மூன்று வகைகளில் பிரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும், இடத்துக்கு ஏற்ப ஆடுகளம் அமைப்பதற்கும் அனைத்து ஊராட்சிகளிலும் கட்டாயம் உடற்பயிற்சிக்கான மேடை அமைப்பதற்கும் பணிகள் துவக்கப்பட உள்ளது.ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'மொத்தமுள்ள 38 ஊராாட்சிகளிலும் மூன்று பிரிவுகளில் முதல் பிரிவில் ஆறு விளையாட்டுகளுக்கான ஆடுகளம், இரண்டு உடற்பயிற்சிக்கான மேடைகளும் வழங்கப்படுகிறது. ஊராட்சிகளில் இடத்தேர்வு செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்படும்' என்றனர்.