உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டு போட்டி அட்டவணை வெளியீடு

விளையாட்டு போட்டி அட்டவணை வெளியீடு

- நமது நிருபர் -திருப்பூர் மாவட்ட அளவில், திறமை காட்டி வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான மாநில விளையாட்டு போட்டி, பள்ளி கல்வித்துறை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.அரையாண்டு தேர்வு துவங்கியதால், போட்டி நிறுத்தப்பட்டது. அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு, புதிய அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய விளையாட்டு போட்டிகள், 2025 ஜன., மாதம் நடக்கவுள்ளது.17 வயது மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டி மதுரையில், ஜன., 6 முதல் 11 வரை நடக்கிறது.ஜன., 22 முதல், 25 வரை ஜூடோ, பீச் வாலிபால் போட்டி கன்னியாகுமரியிலும், நீச்சல், சைக்கிள் போட்டிகள் திருநெல்வேலியிலும், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் சென்னையிலும் நடக்கிறது.பிப்., மாதம் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளதால், ஜன., கடைசி வாரத்துக்குள் போட்டிகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை