உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

அவிநாசி; திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.திருமுருகன்பூண்டி, நெசவாளர் காலனியில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. நேற்று கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் தலைமையில், திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள், விஜயமங்கலம் அப்பரடிப்பொடி புலவர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மஹா கும்பாபிேஷகம் நடந்தது.நேற்று இரண்டாம் கால யாக பூஜையைத் தொடர்ந்து கலச திருக்குடங்கள் புறப்பட்டு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், தரிசனம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.ஸ்ரீ காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி மகளிர் மன்றம், செங்குந்த மகாஜன சங்கம், நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட விழா கமிட்டி யினர் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை