ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை லட்டு தேர் அலங்காரம்
உடுமலை: உடுமலை முத்தையா பிள்ளை லே- அவுட், கிரீன் பார்க் லே-அவுட், ஸ்ரீ சோழீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள அன்னபூரணி அம்மனுக்கு, ஐப்பசி அமாவாசை திதியை முன்னிட்டு,ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை நடந்தது. மாலை, 4:30 மணிக்கு விநாயகர் பூஜை, ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை, ேஹாமங்களும், அம்மனுக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் அலங்கார பூஜைகள் நடந்தன. அம்மன் சன்னதியை, 1008 லட்டுகள் கொண்டு, தேராக அலங்கரித்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, இக்கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா பூஜைகள் துவக்கம் நடந்தன.