மேலும் செய்திகள்
டவுன் மாரியம்மன் கோவிலில் நாளை பொங்கல் திருவிழா
23-Apr-2025
திருப்பூர், ; மங்கலம் ஊராட்சி, அக்ரஹாரப்புத்துாரில் உள்ள மாரியம்மன் கோவிலில், புத்துார், சின்னப்புத்துார், வேட்டுவபாளையம், பொங்கேகவுண்டன்புதுார் மக்கள் வழிபட்டு வருகின்றனர். பழமையான இக்கோவிலில், சித்திரை பொங்கல் விழா நேற்று விமரிசையாக நடந்தது.கடந்த, 6ம் தேதி முனி விரட்டுதல் மற்றும் பூச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. 10ம் தேதி இரவு, நொய்யல் கரையில் இருந்து கம்பம் மற்றும் கும்பம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், தினசரி பூவோடு எடுத்து, கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சியும் நடந்தது.கடந்த, 12ம் தேதி விநாயகர் பொங்கல், அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், நான்கு கிராமங்களில் இருந்து மக்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். நேற்று அதிகாலை, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது; பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலையில், அக்ரஹாரப்புத்துார் மற்றும் சின்னப்புத்துாரில் இருந்து, பூவோடு மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம், பம்பை இசைக்குழு பாடலுடன் நடந்தது.11ம் தேதி முதல், 14ம் தேதி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு, 9:00 மணிக்கு கம்பம் மற்றும் கும்பம் கங்கையில் விடப்பட்டது. இன்று மதியம் மஞ்சள் நீர் விழா, மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடக்க உள்ளன.
23-Apr-2025