உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீசத்ய சாய் விஹார் தயார்

ஸ்ரீசத்ய சாய் விஹார் தயார்

ஸ்ரீசத்ய சாய் விஹார் தயார்நவராத்திரி விழா இன்று துவங்குகிறது. வரும் 1ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் 2ம் தேதி விஜயதசமியுடன் நிறைவடைகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, பி.என்., ரோடு ஸ்ரீசத்ய சாய் விஹாரில், தினமும் சிறப்பு பஜன் வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று கொலு அமைக்க ஏற்பாடு நடந்தது. இன்று முதல் தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பஜன் நடைபெறவுள்ளது. அதையடுத்து 6:45 மணிக்கு, பால விகாஸ் மாணவர்கள் கலை நிகழ்ச்சி, சிறப்பு சொற்பொழிவும், 7:15 மணிக்கு மகா மங்கள ஆரத்தியும் நடைபெறும். இந்நிகழ்ச்சியை திருப்பூர் பகுதியில் உள்ள மண்டல் வாரியான சமிதி உறுப்பினர்கள் முன்நின்று நடத்தவுள்ளனர். பல்வேறு பகுதி சமிதி உறுப்பினர்கள் தினமும் ஒரு மண்டல் சமிதி என்ற வகையில் இதை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தவுள்ளதாக, ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை