ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், வேங்கடவன் அரங்கம் திறப்பு விழா மற்றும் ஸ்ரீ நிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.தளி ரோட்டில், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அனைத்து வசதிகளுடன் கூடிய வேங்கடவன் அரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.தொடர்ந்து, பட்டாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்க, ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் அறங்காவலர்கள், திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.