மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., முகாமில் ரத்த தானம்
07-Jan-2025
திருப்பூர்; தாராபுரத்தில் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பெண் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பரிதாபமாக இறந்தார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ., யாக சுதா, 47 பணியாற்றி வந்தார். சமீபத்தில் உடல் நலம் பிரச்னை காரணமாக சமீபத்தில் ஆப்ரேஷன் நடந்தது. பின், அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார்.திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, கடந்த, நான்கு நாட்களாக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.எஸ்.எஸ்.ஐ., இறந்த சம்பவம், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07-Jan-2025