உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்; இடம் மாற்றி அமைப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம்; இடம் மாற்றி அமைப்பு

அவிநாசி; அவிநாசி ஒன்றியத்தில் நடக்கவுள்ள 'உங்களின் ஸ்டாலின் முகாம்' இடம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதி சேவூர் சிவசக்தி மஹாலில் பாப்பாங்குளம் மற்றும் போத்தம்பாளையம் மற்றும் ஆகஸ்ட் மாதம் தத்தனுார் ஊராட்சிக்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் சிரப்படுவர் என்றும் இடத்தை மாற்ற வேண்டுமெனவும், போத்தம்பாளையம் மக்கள் சேவகன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் புஞ்சை தாமரைக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இது குறித்து, 'தினமலர்'நாளிதழில் செய்தி வெளியானது. அதனடிப்படையில், வரும் 31ம் தேதி சேவூர் - நம்பியூர் ரோட்டில் பவர் ஆபீஸ் ஸ்டாப்பிங், ஜோதிமுத்து மஹாலில் புஞ்சை தாமரைக் குளம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், அந்த ஊராட்சி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !