உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில பேட்மின்டன் நாளை துவக்கம்

மாநில பேட்மின்டன் நாளை துவக்கம்

திருப்பூர்; மாநில அளவில் சப்-ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி திருப்பூரில் நாளை துவங்க உள்ளது. மாநில அளவிலான சப்-ஜூனியர் (13 வயது உட்பட்ட பிரிவு) பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி திருப்பூர் தாராபுரம் ரோடு புதுார் பிரிவில் உள்ள மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில் நாளை துவங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. ஒற்றையர், இரட்டையர், கலப்பு என, தனித்தனியாக போட்டி நடக்கிறது. தமிழகம் முழுவதும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளை திருப்பூர் மாவட்ட பேட்மின்டன் அசோசியேஷன் மற்றும் தமிழக பேட்மின்டன் அசோசியேஷன் ஆகியன இணைந்து நடத்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை