உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில சதுரங்கம்; 8 வீரர்கள் தேர்வு 

மாநில சதுரங்கம்; 8 வீரர்கள் தேர்வு 

திருப்பூர்: வெள்ளகோவில் அடுத்த முத்துார், வாய்க்கால்மேட்டுத்தோட்டம், ஸ்ரீ ஆனுார் வித்யாலயாவில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.மாவட்டத்தில் உள்ள, எட்டு குறுமைய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். 11 வயது, மாணவர் பிரிவில் தக் ஷன் (முருகு மெட்ரிக்), மாணவியர் பிரிவில், ரிஷிகா (ஸ்ரீ சாய் மெட்ரிக்). 14 வயது, மாணவர் பிரிவில், அபினேஷ் (ஊராட்சி நடுநிலைப்பள்ளி, நேரு நகர்), மாணவியர் பிரிவில், ஹாசினி (முருகு மெட்ரிக்).பதினேழு வயது மாணவர் பிரிவில் சுதீஸ்குமார் (பிஷப் உபகாரசாமி பள்ளி), மாணவியர் பிரிவில் மதுமிதா (குளோபல் பாலபவன் பள்ளி). 19 வயது மாணவர் பிரிவில், கோகுலகிருஷ்ணா (திருமுருகன் மெட்ரிக்), மாணவியர் பிரிவில் சந்தியா (உடுமலை, ஸ்ரீநிவாசா மெட்ரிக்) முதலிடம் பெற்றனர். மாவட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்த எட்டு பேரும், மாநில போட்டிக்கு, மாவட்ட கல்வித்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை