உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில அளவிலான கலை போட்டி; அரசு பள்ளி மாணவியர் வெற்றி

மாநில அளவிலான கலை போட்டி; அரசு பள்ளி மாணவியர் வெற்றி

உடுமலை; மாநிலஅளவிலான கலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு,பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், வளர் இளம் பருவக்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பங்கேற்று நடித்தல் (ரோல் ப்ளே) போட்டி நடக்கிறது.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போட்டி நடக்கிறது.பள்ளி அளவிலும், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடந்தது. மாநில அளவிலான போட்டி திருச்சியில் நடந்தது. இப்போட்டியில், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவியர், மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவியர், பொறுப்பாசிரியர்கள் விஜயலட்சுமி, சின்னராசு உள்ளிட்டோருக்கு பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி