உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில அளவிலான கபடி போட்டி

மாநில அளவிலான கபடி போட்டி

உடுமலை:கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, 96 - 97ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி உடுமலை எஸ்.வி., புரத்தில் நடந்தது. இரு நாட்கள் நடைபெற்ற போட்டியில், தளவாய்பட்டணம் கபடி அணி, வெற்றி பெற்று கதிரேசன் மெமோரியல் கோப்பையை கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை தாராபுரம் அணியும், மூன்றாமிடத்தை மருள்பட்டி அணியும் கைப்பற்றின. வெற்றி பெற்ற அணியினருக்கு, எஸ்.ஐ., ஜனகமகாராஜன், ஒருங்கிணைப்பாளர் சென்னியப்பன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை