உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில யோகாசனப்போட்டி

மாநில யோகாசனப்போட்டி

தபஸ் யோகாலயா சார்பில், அவிநாசியில், மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடந்தது. தமிழகம், புதுவையை சேர்ந்த 500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியை, திருப்புக்கொளியூர் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள், திருநாவுக்கரசர் நந்தவனம் திருமடம் முத்துசிவ ராமசாமி அடிகளார், அகில பாரத சாதுக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகள் ஆகியோர் துவக்கிவைத்தனர். பழங்கரை முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், யோகா ஆசிரியர்கள் ரகுபாலன், சத்யா உள்ளிட்டோர், வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ