மேலும் செய்திகள்
மதுரையை மிரட்டும் மேகங்கள்
09-Oct-2024
உடுமலை ; தொடர் மழை மற்றும் தொகுப்பு அணைகளில் நீர்வரத்து உள்ளிட்ட காரணங்களால், திருமூர்த்தி அணையின் நீர மட்டம் நிலையாக உள்ளது.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு, தண்ணீர் பெற்று இருப்பு செய்து, மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.தற்போது, திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.வழக்கமாக மண்டல பாசன காலங்களில், அணையின் நீர் இருப்பு குறைந்து விடும். நடப்பு சீசனில், பாசன காலம் துவங்கியது முதல் போதிய இடைவெளியில், மழை பெய்து வருகிறது.குறிப்பாக மூன்றாம் சுற்று பாசனம் துவங்கியதில் இருந்து, மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அணைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.மேலும், தொகுப்பு அணைகளில் இருந்து, தொடர்ந்து காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து உள்ளது.நேற்று காலை நிலவரப்படி அணைக்கு, காண்டூர் கால்வாய் வாயிலாக, வினாடிக்கு, 865 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணைப்பகுதியில், 7 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.அணை நீர்மட்டம், 60 அடிக்கு, 52.93 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் நிலையாக இருப்பதால், முதலாம் மற்றும் நான்காம் மண்டல பாசனத்துக்கு, உயிர் தண்ணீர் வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்த இரண்டு மண்டலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு பாசன நீர் வழங்கவில்லை. பாசன பகுதியிலுள்ள குளங்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.உயிர் தண்ணீர் திறப்பின் போது, குளங்களுக்கும் தண்ணீர் திறக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
09-Oct-2024