உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிகாட்டு குழு: விவசாயிகள் யோசனை

வழிகாட்டு குழு: விவசாயிகள் யோசனை

திருப்பூர்; 'தமிழக அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கும் குழுவில், விவசாய அமைப்பின் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும்,' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது: கரூரில் த.வெ.க., பிரசார பயணத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, இத்தகைய நிகழ்வுகளுக்கு அனுமதி கொடுக்க, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறை வகுக்க, தமிழக அரசு குழுவை அமைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இக்குழுவில், விவசாய சங்கத்தினர் உள் ளிட்ட பொதுநல அமைப்பினரின் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். திருப்பூர் உள்ளிட்ட இடங்களில், கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட வற்றுக்கு, போலீசார் அனுமதி வழங்குவதில் குழப்பம் நிலவுவதால், பல இடங்களில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுகிறது. அனுமதி கேட்டு போலீசாரிடம் வழங்கும் மனுக்களுக்கு, போலீசார் சார்பில், போராட்டம் நடத்த திட்டமிடப்பட்ட நாளுக்கு முந்தைய இரவில் பதில் தருவது; அனுமதி மறுப்பது, வாய்மொழி உத்தரவில் அனுமதி வழங்கிவிட்டு, களத்திற்கு வந்தவுடன் அவர்களை கைது செய்வது என்பது பல முரண்பாடுகள் நிலவுகின்றன. எனவே, பொதுக்கூட் டம், ஆர்ப்பாட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுப்பது வரவேற்கத்தக்கது. வழிகாட்டு நெறி முறை வகுக்க அரசு நிர்ணயிக்கும் குழுவில், விவசாயிகள் சங்க பிரநிதிகளையும் இணைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை