செயற்கைக் கால்கள் வழங்கி நற்சேவை
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு, சக்தி ரோட்டரி சங்கம் சார்பில், கடந்த டிச., மாதம், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்க, அளவீடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி, சேவூர் அருகே உள்ள ஸ்ரீதரா டெக்ஸ்டைல் நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது.'சக் ஷம்' தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம், பழனிசாமி - பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். ஸ்ரீதரா டெக்ஸ்டைல் நிறுவன சமுதாய பொறுப்புணர்வு நிதியில், பயனாளிகளுக்கு, 4.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, செயற்கை அவயம் மற்றும் உபகரணம் வழங்கப்பட்டது. நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரேம் பிரகாஷ் சிக்கா, நல உதவிகளை வழங்கினார்.