உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டோர மரங்களில் ஸ்டிக்கர்கள்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோர மரங்களில் ஸ்டிக்கர்கள்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

உடுமலை; திருமூர்த்திமலை ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோர மரங்களில், ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை செல்லும் ரோடு நெடுஞ்சாலைத்துறையால், மாவட்ட முக்கிய சாலை பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் அதிகளவு செல்லும் இந்த ரோட்டில், சில பகுதிகளில், விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ரோட்டோரத்திலுள்ள மரங்களில், ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. வாகன ஓட்டுநர்களுக்காக, பராமரிப்பில்லாத மைல்கற்கள் புதுப்பிக்கப்பட்டு, தகவல்கள் எழுதப்படுகிறது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பாலங்களும் புதுப்பொலிவு பெறும் வகையில், வர்ணம் பூசப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திருமூர்த்திமலை ரோட்டில், மைல்கற்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதர மேம்பாட்டு பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை