உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டில் வளர்த்த நாயை கொன்ற தெரு நாய்கள்

வீட்டில் வளர்த்த நாயை கொன்ற தெரு நாய்கள்

கனகராஜ் (பல்லடம்): தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி பெருகி வருகின்றன. பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டு வந்த தெரு நாய்களால், விவசாயிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. வளர்ப்பு நாய்களுக்கு கூட, தெரு நாய்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. நாங்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயை, சமீபத்தில், தெரு நாய்கள் சூழ்ந்து கடித்து குதறி கொன்றன. இவ்வாறு, தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்கள் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான எந்தவித முயற்சிகளை மேற்கொள்வதில்லை. நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் குறித்து பெரிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை