உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெருநாய்கள் அட்டகாசம்; பறிபோகிறது வாழ்வாதாரம்

தெருநாய்கள் அட்டகாசம்; பறிபோகிறது வாழ்வாதாரம்

திருப்பூர்; தெருநாய்கள் கால்நடைகளைக் கொல்லும் சம்பவங்கள் தொடர்வதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.'பல்லடம் அருகே வாழை இலையில் விஷம் வைத்து, 14 நாய்கள் கொல்லப்பட்டுள்ளன' என்ற 'பியூபில் பார் அனிமல்' அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.அவிநாசிபாளையம் போலீசார் முன்னிலையில், கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட நாய்களின் பிரேதத்தை தோண்டியெடுத்து, கால்நடை மருத்துவர் வாயிலாக, நாய்களின் உடற்பாகங்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.விவசாயிகள் கூறியதாவது:கடந்த ஒன்றரை ஆண்டாக தெரு நாய்களால் கடிபட்டு நுாற்றுக்கணக்கான ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாகின்றன; கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள், வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கேட்டு, கலெக்டர் துவங்கி, துறை அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வர் வரை 'மனுப்போர்' நடத்தியுள்ளோம்; விவசாயிகள் சாலையில் இறங்கி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மவுனம் காப்பது, ஆச்சர்யமளிக்கிறது. விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் நாய்களின் உடலை தோண்டியெடுத்து, உடற்கூறாய்வு செய்வதில் காட்டப்பட்ட வேகம், நுாற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் தொடர்ந்து பலியான விவகாரத்தில் காட்டப்படவில்லை. ஒவ்வொரு விவசாயிகளும் நாய் வளர்க்கின்றனர்; நாய்களின் மீது வெறுப்பு என்பதெல்லாம் இல்லை. ஆனால், தெரு நாய்கள் வெறிபிடித்தது போன்று சுபாவத்தை மாற்றி, வாழ்வாதாரத்தை பாதிக்க செய்து கொண்டிருக்கின்றன. இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எங்களின் கேள்வி.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

'விலங்குகள் நல அமைப்பினரையும்

பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள்'பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம் -வெள்ளகோவில் ) நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில்,''தெருநாய்கள் பிரச்னை தொடர்பாக, விவசாய சங்கத்தினரை அழைத்து மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தும் போது, அதில், விலங்கு நல அமைப்பினர் மற்றும் தெரு நாய்கள் மீது அக்கறை உள்ளவர்களையும் அழைக்க வேண்டும் என, பலமுறை கூறியுள்ளோம். அதற்கான ஏற்பாடை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்'' என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி