கிராமத்தில் எரியாத தெருவிளக்குகள்
உடுமலை, ; புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அடிவள்ளி. கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாத நிலையில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இறங்கி 2 கி.மீ.,க்கு மக்கள் நடந்து செல்கின்றனர். அவ்வழித்தடத்தில், ஊராட்சியால் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில், மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.