உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் பொருள் வாங்க போராட்டம்; சோமவாரப்பட்டி மக்கள் வேதனை

ரேஷன் பொருள் வாங்க போராட்டம்; சோமவாரப்பட்டி மக்கள் வேதனை

உடுமலை; ரேஷன் பொருட்கள் வாங்க பல நாட்கள் காத்திருக்கும் அவலத்தால், பெதப்பம்பட்டி கிராம மக்கள் வேதனையில் உள்ளனர். உடுமலை தாலுகா, சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டியில், 1,200க்கும் அதிகமான ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரே ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. நாள்தோறும், 50க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் திரும்பி செல்கின்றனர். இதற்கு ரேஷன் கடை பணியாளர்கள் தரப்பில் முறையான பதில் அளிப்பதில்லை. சோமவாரப்பட்டி மக்கள் கூறியதாவது: ரேஷன் பொருட்களை பல நாட்கள் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக செல்ல முடியாதவர்கள் பொருட்களே வேண்டாம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிக ரேஷன்கார்டுகள் உள்ளதால், கடையை இரண்டாக பிரிக்க வேண்டும். அல்லது பகுதி வாரியாக வினியோகத்தை பிரித்து சீரமைக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும், ரேஷன் கடை பணியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அரசின் ரேஷன் பொருட்களை பெற முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள், தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ