மேலும் செய்திகள்
'புதிய தொழில்நுட்பங்களால் அதிக லாபம் ஈட்டலாம்'
31-Mar-2025
பல்லடம்; சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலை கிராமத்தில், கோவை வேளாண் பல்கலை நான்காமாண்டு மாணவியர் முகாமிட்டுள்ளனர். கிராமத்திலுள்ள தென்னை விவசாயிகளின் ஆலோசனைகளை பெற்றும், தென்னை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியும் பயிற்சியில் ஈடுபட்டனர்.வேளாண் பல்கலை மாணவியர் கூறுகையில், 'வேளாண் பல்கலை மூலம் அங்கீகரிக்கப்பட்ட டானிக்கை தென்னை வேர்களுக்கு செலுத்துவதன் மூலம், தென்னையில் இலைகளின் எண்ணிக்கையும், இலைகளில் பச்சையத்தின் அளவும், பாளைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். குரும்பை கொட்டுதல் குறைந்து, காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பாதிப்புகள் குறைந்து, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால், தென்னையில் விளைச்சல் அதிகரித்து கூடுதல் லாபம் பெற முடியும். மேலும், டானிக் பயன்படுத்துவதால், பராமரிப்புகளும் குறையும்,' என்றனர்.முன்னதாக, தென்னையில் வேருக்கு செலுத்த வேண்டிய டானிக் அளவு, இடைவெளி, வைக்க வேண்டிய முறை உள்ளிட்டவை குறித்து மாணவியர் செயல்முறை விளக்கம் அளித்தனர். முகாமின் ஒரு பகுதியாக, செஞ்சேரிமலை கிராமத்தின் கிராமப்புற மதிப்பீட்டை மாணவியர் தயாரித்தனர்.
31-Mar-2025