மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக விலங்குகள் தினம்
04-Oct-2025
திருப்பூர்; உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு-2, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் இணைந்து உடுமலை வனப்பகுதியிலுள்ள ஏழுமலையான் வெங்கடாசலபதி கோவிலில் விழிப்புணர்வு நடத்தினர். என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்ட அலுவலர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வனச்சரக அலுவலர் வாசு பேசுகையில், ''வனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும். வனங்களில் விலங்கு கண்டு ரசிக்க வேண்டுமே தவிர, செல்பி எடுத்தல், உணவளித்தல், விலங்குகளை தொந்தரவு செய்தல் கூடாது. பிளாஸ்டிக் பைகளை எடுத்து வரக்கூடாது,'' என்றார். தொடர்ந்து வனவிலங்கு தினத்தை அனுசரிக்கும் வகையில், மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரேவதி, நவீன்குமார், பிரியங்கா, லோகேஸ்வரி, மைவிழி, தலைமையில் விலங்குகளை பாதுகாத்தல், பிரபஞ்சத்தை பாதுகாத்தல் என்ற மையக் கருத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதவிர, மாணவர்கள், புலி வேடமணிந்து நடனமாடி, மனித கோபுரம் அமைத்தும் விழிப்புணர்வு செய்தனர்.
04-Oct-2025