மேலும் செய்திகள்
மாணவர்கள் உறுதிமொழி
14-Apr-2025
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், மக்கள் மத்தியில், போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணிதிட்டம் அலகு-2 சார்பில், கல்லுாரி முன்பு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு நடந்தது.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை தடமாறி சென்று விடுகின்றனர். போதை பொருட்களின் தீமைகள் உள்ளிட்டவை எடுத்துரைத்து, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், ஓவியங்களை ஏந்தியும், 'வேண்டாம் வேண்டாம் போதை வேண்டாம்' போன்ற கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு செய்தனர்.
14-Apr-2025