உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர் பேரவை பிரதிநிதிகள் பொறுப்பேற்பு

மாணவர் பேரவை பிரதிநிதிகள் பொறுப்பேற்பு

திருப்பூர்; திருப்பூர், அமராவதிபாளையத்தில் உள்ள டி.கே.டி., குளோபல் பப்ளிக் பள்ளியில், மாணவர் பேரவை விழா நடந்தது. மாணவ, மாணவியர் மத்தியில் தலைமை பண்பு மற்றும் ஆளுமைப்பண்பை வளர்த்தெடுக்கும் நோக்கில், பேரவை தலைவர், தலைவி, துணை தலைவர், துணைத்தலைவி உள்ளிட்ட பதவிகளுக்கு மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பல்வேறு துறை மற்றும் குழு தலைவர், துணைத்தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 'தங்கள் பொறுப்பு, கடமைகளை சரிவர செய்வோம்' என, அவர்கள் உறுதியேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ