வித்யாசாகர் பள்ளியில் மாணவர்கள் தேர்தல்
திருப்பூர்; திருப்பூர், கூலிபாளையம், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், புதிய கல்வியாண்டுக்கான மாணவர்கள் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கான விண்ணப்பங்கள் இணையம் வழியாக, போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.மாணவர் மதிப்பெண், வினாக்களுக்கு அளித்த பதில்கள் ஆகியன அடிப்படையில் சிறந்த ஐந்து மாணவர்கள் பள்ளி தலைவர், செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.பள்ளி தலைவராக பிளஸ் 2 வகுப்பு மாணவர் சஞ்சய் ஸ்ரீதன்; மாணவியர் தலைவராக பிளஸ் 2 வகுப்பு மாணவி சஹானா தேர்வாயினர்.லுாசியன் அணி தலைவராக சாருகேஷ், துணைத்தலைவராக ஷிவானி; ரீசியன்ஷ் அணி தலைவராக விசாந்த், துணைத்தலைவராக சன்மிகா; ஹாப்லிங்கர்ஸ் அணி தலைவராக தர்ஷன், துணைத்தலைவராக சஸ்மிதா; வார்லேண்டர்ஷ் அணி தலைவராக பிரவந்திகா, துணைத்தலைவராக நிதிஷ் கண்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்றோருக்கு பள்ளி செயலர் மற்றும் முதல்வர், மாணவர் குழுக்களுக்கான கொடிகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.