உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களின் வெற்றியே எங்கள் குறிக்கோள்! வித்யாசாகர் பள்ளி தாளாளர் பெருமிதம்

மாணவர்களின் வெற்றியே எங்கள் குறிக்கோள்! வித்யாசாகர் பள்ளி தாளாளர் பெருமிதம்

திருப்பூர், கூலிபாளையம் நால் ரோட்டில் இயங்கும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி தாளாளர் ஆண்டவர்ராமசாமி கூறியதாவது:கடந்த, 1992ல் வித்யாசாகர் பள்ளி உருவானது; 2008ல், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றோம். பள்ளி செயலாளர் சிவபிரியா, வித்யா விகாஸ் பள்ளி செயலாளர் மாதேஸ்வரன், பொருளாளர் ராதா ஆகியோரின் சீரிய முயற்சியால் பள்ளி சிறப்புற செயல்பட்டு வருகிறது. 2014 -15ல், பிளஸ் 2வில், பவித்ரா, மாநில முதலிடம்; 2016 - 2017ல் ஹரி விஷ்ணு, மாநில இரண்டாமிடம் பெற்றனர்.ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள், 'மெரிட்'டில் தேர்ச்சி பெறும் குழந்தைகள், பொருளாதாரத்தில் வசதி குறைந்த குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு, 1.50 கோடி ரூபாய் அளவுக்கு கல்விக்கட்டண சலுகை வழங்கியுள்ளோம். கொரோனா சமயத்தில்,25 சதவீதம் கல்விக்கட்டண சலுகை வழங்க அரசு அறிவுறுத்தியது; நாங்கள், 50 சதவீதம் வழங்கினோம்.எங்கள் பள்ளியில் பிளஸ் 2 முடித்து செல்லும் மாணவ செல்வங்கள் பலர் எம்.ஐ.டி., - ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வியில் இணைந்து பயில்கின்றனர். கல்லுாரியில் இணைவோர், 'கேபிடேஷன்' கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமிருக்காது; அந்தளவு மதிப்பெண் பெற வைக்கிறோம். 35 ஆண்டுகால கல்வி சேவையில் ஏராளமான டாக்டர், ஆடிட்டர், வக்கீல், ஆசிரியர்கள் என பல வித்தகர்களை உருவாக்கியுள்ளோம்.ஆன்மிகத்தில் எம் பள்ளி குழந்தைகளை வழி நடத்துவதால், அவர்கள் மனம் நல் சிந்தனை பெறுகிறது. ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதே எங்களின் தாரக மந்திரம். மொபைல் போன், போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருப்பதற்கான தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.எங்கள் மாணவர்களின் அடையாளமே தனித்திறமை, தனித்துவம் தான். பெற்றோர், ஆசிரியர் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மாணவர்களை நல்வழியில் கொண்டு செல்ல முடியும் என்பதை பெற்றோரிடம் உணர்த்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கல்விக்கண் திறக்க உதவி!- ஆண்டவர் ராமசாமி

நான் பிறந்த ஊர் வெள்ளிரவெளி என்கிற சிறிய கிராமம். 1977ல், திருப்பூர் வந்துவிட்டேன். 1980களில், அந்த ஊர் மக்கள் சிலர் என்னிடம் வந்து, 'நம்ம ஊரு பிள்ளைகள், 8ம் வகுப்பு தாண்ட முடியவில்லை. நிலம் வாங்கிக் கொடுத்தால் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டி பிள்ளைகளுக்கு உயர்கல்வி வழங்க முடியும்' என்றனர். நான், 5.15 ஏக்கர் வாங்கி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பெயரில் மாற்றிக் கொடுத்து, 4 வகுப்பறையும் கட்டிக் கொடுத்தேன். தொடர்ந்து, 2000ம் ஆண்டில், பிளஸ் 2 கொண்டு வந்தார்கள்; பெரிய தொகை நன்கொடையாக வழங்கி, ஊர் மக்கள் உதவியுடன், 4 வகுப்பறை கட்டினோம். அப்போதிருந்த அமைச்சரிடம் கோரிக்கை வைத்து, 1.36 கோடி ரூபாய் நிதி பெற்று, பள்ளியை மேம்படுத்தினோம். இன்று, 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அங்கு படிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ