வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பெரிய திட்டமா இருக்கே. ஐந்தாண்டு திட்டம். 20 அம்சதிட்டம். இந்தியா வல்லரசு திட்டம் ரேஞ்சுல.
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
துண்டு துண்டா வெட்டனும் மாணவனுக அல்ல தறுதல க பெத்த கழிசடைக
திருப்பூர்; கோவை கல்லுாரி மாணவன் தற்கொலை செய்த விவகாரத்தில், சக மாணவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.திருப்பூர், ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் சத்யநாராயணன், 21; கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். பிறந்த நாளான கடந்த 3ம் தேதி வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அன்று இரவு நீண்ட நேரம் தாயிடம் பேசிவிட்டு துாங்க சென்றவர், அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மொபைல் போனை பெற்றோர் பார்த்த போது, மகன் அழுதபடி ஆடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். மூன்று மாணவர்கள் அவரை 'பிராங்க்' செய்து தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்தது தெரிந்தது. ஆடியோவை கைப்பற்றி நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். கல்லுாரி நிர்வாகத்தினர் இதுதொடர்பாக மூன்று மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், ''மாணவன் தற்கொலை விவகாரத்தில், வகுப்பில் எந்த மாதிரி மாணவனை கிண்டல் செய்தனர் என்பது குறித்து சக மாணவர்களிடம் விசாரிக்க உள்ளோம். மூன்று மாணவர்களை முதல் கட்டமாக 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவர்களை கல்லுாரியில் இருந்து நீக்க கல்லுாரி நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர். வகுப்பில் நடந்தவற்றை தெரிந்த பின், மூன்று மாணவர்களையும் அழைத்து விசாரிக்க உள்ளோம். தற்கொலை செய்த மாணவர், கிண்டல் காரணமாக கடுமையாக மனமுடைந்து, அதை கடந்து செல்ல முடியாமல் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மூன்று பேரிடம் விசாரித்த பின், அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.
போலீசார் கைப்பற்றிய, மூன்று நிமிட ஆடியோவில், முதல் வார்த்தையே அழுகையுடன் துவங்குகிறது. தான் நினைத்ததை பேச முடியாமல் சில நிமிடங்கள் நிறுத்தி, நிறுத்தி சத்யநாராயணன் பேசுகிறார். தொடர்ந்து, 'மேம்... மனசே ரொம்ப ஓவர் திங்கிங்காகுது. அந்த நபர் போன் செய்ததில் இருந்து என்னால் இரவு முழுவதும் துாங்கவே முடியல. ரொம்ப டிப்ரசனா இருக்கு. இன்னிக்கு கூட புகார் கொடுத்திருக்கேன். ஆனாலும், பயமக இருக்கு. அடுத்து அவன் யாரையாச்சும் ஆட்கள கூட்டிட்டு வந்து ஏதாச்சும் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு. மேம், இதோட விட்டுருங்க...எதுவும் சொல்ல முடியல மேம். எனக்கு மனசே ரொம்ப சைக்காலாஜிக்கலா... மைன்டே ரொம்ப... யாருகிட்ட சொல்றதுன்னே தெரியல மேம். அன்றைக்கு அது நடந்துதல இருந்து, இன்னைக்கு வரைக்கும் என்னால... நாளைக்கு காலேஜ் வருவேனான்னு தெரியல. காலேஜ் வரவே பயமாக இருக்கு. மனசு முழுசும் அதே தான் நெனைச்சிக்கிட்டு இருக்கேன். துாங்க முடியல. சாப்பிட முடியல. பஸ்சுல எப்பயும் டிப்ரசனா இருந்தேன். என்னென்னமோ தோணுது மேம். சூசைட் செய்யலாமா.. செத்து போலாமான்னு. காலேஜ் வரவே பயமா இருக்கு..'' என்று பேசி முடிக்கிறார்.
பெரிய திட்டமா இருக்கே. ஐந்தாண்டு திட்டம். 20 அம்சதிட்டம். இந்தியா வல்லரசு திட்டம் ரேஞ்சுல.
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
துண்டு துண்டா வெட்டனும் மாணவனுக அல்ல தறுதல க பெத்த கழிசடைக