உள்ளூர் செய்திகள்

 மாணவி தற்கொலை

தாராபுரம்: தாராபுரம் அருகே அரசு பள்ளி மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாராபுரம், அலங்கியத்தை சேர்ந்தவர் லோகநாதன், 36. இவரது மகள் புகழ்மதி, 15. அருகிலுள்ள அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நீண்ட நேரம் மொபைல் போன் பார்த்து வந்தார். இதனை அவரின் தாய் கண்டித்ததால், மனமுடைந்த அவர் பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி