மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
10-Aug-2025
உடுமலை: உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், தேசிய விண்வெளி தின போட்டிகள் இன்று நடக்கிறது. தேசிய விண்வெளி தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், தேஜஸ் ரோட்டரி சங்கம், சுற்றுசூழல் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், இன்று வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. இன்று காலை, 8:30 மணி முதல் 9:30 மணி வரை, போட்டிகளுக்கான பதிவு கல்லுாரியில் நடைபெறுகிறது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் ஓவியப்போட்டி, அறிவியல் வினாடிவினா, போஸ்டர் வடிவமைத்தல் போட்டிகள் நடக்கிறது. தொடர்ந்து ஆர்யபட்டா மாதிரி தயாரிக்கும் பயிற்சி பட்டறை நடக்கிறது. போட்டிகள் குறித்து கூடுதல் விபரங்களை அறிவதற்கு 99424 67764, 88835 35380 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
10-Aug-2025