உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு விடுதியில் தங்கி படிக்கலாம்; மாணவ, மாணவியருக்கு அழைப்பு

அரசு விடுதியில் தங்கி படிக்கலாம்; மாணவ, மாணவியருக்கு அழைப்பு

திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியருக்கான 19 வீடுதிகள் செயல்பட்டுவருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு 8, மாணவியருக்கு, 6; கல்லுாரி மாணவர்களுக்கு 3, மாணவியருக்கு 2 விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில், நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியரும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியரும் சேரலாம்.தகுதியுள்ள மாணவ, மாணவியர், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், பள்ளிக்கான விண்ணப்பங்களை, 18ம் தேதிக்குள்ளும், கல்லுாரி விண்ணப்பங்களை, ஜூலை 17க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை