விவசாய கண்காட்சியில் மாணவர்களுக்கு போட்டி
உடுமலை: உடுமலையில் நடக்கும், விவசாய கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், 'அறுவடை' என்ற தலைப்பில் சிறப்பு விவசாய கண்காட்சி ஜி.வி.ஜி., கலையரங்கில் மே 2, 3, 4 உள்ளிட்ட நாட்களில் நடக்கிறது.கண்காட்சியையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இசை, பாட்டு, ஓவியம், போஸ்டர் தயாரித்தல், மாறுவேடப்போட்டிகளும் நடக்கிறது. போட்டிகள் உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.தொடர்ந்து உடுமலை கலிலியோ அறிவியல்கழகம் சார்பில் போட்டி நடக்கும் மூன்று நாட்களுக்கும், அறிவியல் பயிற்சி பட்டறை, இரவு வான்நோக்கும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கேடயம், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அறிவியல் பயிற்சி பட்டறையில் பங்கேற்போருக்கு இஸ்ரோவின் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.போட்டியில் பங்கேற்க வருவோர், தங்களின் பெற்றோருடன் வருவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. போட்டி பற்றி அட்டவணைகள், நாள், நேரம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து, உடுமலை தமிழிசை சங்கம் அல்லது கலிலியோ அறிவியல் கழகம் பொறுப்பாளர்களின் 88835 35380, 87782 01926 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.