உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுமைய போட்டிகளில் மாணவர்கள் உற்சாகம்

குறுமைய போட்டிகளில் மாணவர்கள் உற்சாகம்

திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதில், 14 வயது பிரிவில், எஸ்.பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. மணி பப்ளிக் பள்ளி அணி, இரண்டாமிடம் பெற்றது. 17 வயது பிரிவில், எஸ்.பெரியபாளையம் பள்ளி அணி முதலிடம் பெற்றது; பிளாட்டோஸ் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. 19 வயது பிரிவில், விவேகானந்தா பள்ளி அணி, எம்.என்.எம்.சி., பள்ளி அணியை வென்றது. கைப்பந்து திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், 14 வயது பிரிவில், செயின்ட் ஜோசப் பள்ளி அணி, 3-1 என்ற புள்ளி கணக்கில் எம்.என்.எம்.சி., பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவிலும் செயின்ட் ஜோசப் பள்ளி அணி, 3-1 என்ற புள்ளி கணக்கில், பிரன்ட் லைன் பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில், அலகுமலை ஸ்ரீவித்யாலயா பள்ளி அணி, 4-2 என்ற புள்ளி கணக்கில் எஸ்.பெரியபாளையம் பள்ளி அணியை வென்றது. கால்பந்து அவிநாசி குறுமைய அளவிலான கால்பந்து, 14 வயது பிரிவில், அவிநாசி கல்வி நிலைய பள்ளி அணி, முதல் போட்டியில், ஹயக்ரீவர் பள்ளி அணியை, 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில், எஸ்.கே.எல்., பள்ளி அணியை, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில், பெருமாநல்லுார் ஸ்ரீவிக்னேஸ்வரா பள்ளி அணியுடன் மோதிய, அவிநாசி கல்வி நிலைய அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அவிநாசி கல்வி நிலைய அணி, மாவட்ட அளவிலான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற அணியினரை, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை