உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட சதுரங்க போட்டி;  மாணவர்கள் உற்சாகம்

மாவட்ட சதுரங்க போட்டி;  மாணவர்கள் உற்சாகம்

திருப்பூர்; திருப்பூர் பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட சதுரங்க போட்டி நடந்தது. இதில், மாவட்டம் முழுதும் இருந்து, 425 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி தாளாளர் சிவசாமி, பள்ளி இயக்குனர் சக்திநந்தன், மாவட்ட சதுரங்க பொருளாளர் ராஜேந்திரன், செஸ் தலைமை பயிற்சியாளர் சதீஷ் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தனர். ஒன்பது, 12 மற்றும், 15 வயது என ஏழு சுற்றுகளாக போட்டிகள் நடந்தது.பொதுப்பிரிவில் ஹரி, 15 வயது மாணவர் பிரிவில் அபினேஷ், மாணவியர் பிரிவில் ஹாசினி, 12 வயது மாணவர் பிரிவில் ரித்திக், மாணவியர் பிரிவில் தேவஸ்ரீ, ஒன்பது வயது மாணவர் பிரிவில் விசாகன், மாணவியர் பிரிவில் யாழிசை ஆகியோர் முதலிடம் பெற்றனர். பள்ளி செயலாளர் சிவகாமி, பள்ளி இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.வெற்றி பெற்றவர்களுக்கு, 90 கோப்பைகள் மற்றும் 15 பேருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை