உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு கஞ்சா; கலெக்டரிடம் புகார் மனு

மாணவர்களுக்கு கஞ்சா; கலெக்டரிடம் புகார் மனு

திருப்பூர் : திருப்பூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்கப்படுவதாக பள்ளி மேலாண்மைக்குழு கலெக்டருக்கு புகார் அனுப்பியுள்ளது.திருப்பூர், பி.என்., ரோட்டில், நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியும், துவக்கப்பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில், பள்ளி வளாகம் முன்பும், பின்பும் வாடகை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மறைவான பகுதியில், போதைப்பொருட்கள் மாணவர்களுக்கு விற்கப்படுகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் விமலா, ''முதியவர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்கிறார். இதை பள்ளி மாணவர்கள் வாங்கியதை பார்த்தோம்,'' என்றார்.இதற்கிடையே, கல்வி நிலையங்கள் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றால், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தகவல் அளித்தவரின் விவரங்கள், 'லீக்' ஆவதை தவிர்க்க, மாநில அரசால், www.drugfree-tn.comஎன்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி