டேபிள் டென்னிஸ் போட்டி மாணவர்கள் ஆர்வம்
திருப்பூர்: திருப்பூர் சகோதயா நடத்தும் அனைத்து பள்ளிகளுக்கு இடையேயான பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி,ஸ்ரீ ஷிவ் வித்யா மந்திர் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், 11 பள்ளிகள் பங்கேற்றன. பள்ளியின் சேர்மன் சென்னியப்பன், சிவகாமி, பள்ளி இயக்குனர்கள் மதுபாலாஜி, பூர்வ வர்ஷனி, பள்ளி முதல்வர் அணில்குமார் உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.