மேலும் செய்திகள்
கலைத்திருவிழா போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
18-Oct-2025
திருப்பூர்: அவிநாசி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்தன. முதல் நாள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, இரண்டாம் நாள் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. கலைத்திருவிழா போட்டிகளை அவிநாசி வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தரராஜன், திருநாவுக்கரசு, வட்டார வள மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, தேசபக்தி பாடல், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், ஓவியம், பல குரல் பேச்சு உட்பட 32 போட்டிகள் நடத்தப்பட்டன. அவிநாசி வட்டாரத்தில் உள்ள 132 பள்ளிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தெக்கலுார் காந்திநகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி, அம்மாபாளையம் பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், சமத்துவபுரம் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைந்து போட்டிகளை நடத்தினர். வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.
18-Oct-2025