உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சப் ஜூனியர் பேட்மின்டன்; 650 பேர் பங்கேற்பு

சப் ஜூனியர் பேட்மின்டன்; 650 பேர் பங்கேற்பு

திருப்பூர் :திருப்பூரில் மாநில அளவிலான சப் ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது; 650 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 13 வயதுக்குட்பட்ட, சப் ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டி, திருப்பூர் மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில் நேற்று துவங்கியது. தமிழ்நாடு பேட்மின்டன் சங்க அமைப்பு செயலாளர் மோகன்குமார், வரவேற்றார். திருப்பூர் மாவட்ட பேட்மின்டன் சங்க தலைவர் ராமமூர்த்தி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழ்நாடு பால் பேட்மின்டன் சங்க சீனியர் துணைத் தலைவர் சுரேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். இணை செயலர் அருண், கவுரவ விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், கண்காணிப்பாளராக செயல்பட்டார். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், ஆண், பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும், 27ம் தேதி அரையிறுதி, 28ம் தேதி இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை