சப்-ஜூனியர் பெண்கள் கபடி அணி தேர்வு
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், சப்- ஜூனியர், பெண்கள் சீனியர் அணி தேர்வு, மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம் போட்டிகளை துவக்கி வைத்தார். சப்-ஜூனியர் பிரிவுக்கான தேர்வு போட்டியில், 80 மாணவியரும், சீனியர் அணி தேர்வில், 40 பெண்கள் என, 120 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இவர்களில் சிறப்பாக திறமை காட்டிய, 24 பேர் மாவட்ட கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட, 12 பேர் கொண்ட சப் ஜூனியர் அணி வரும், 31 முதல் பிப்., 2 வரை தஞ்சாவூரில் நடக்கும் மாநில சாம்பியன்ஷிப் போட்டியிலும், சீனியர் பெண்கள் அணி, ஜன., 17 முதல், 19 வரை சேலத்தில் நடக்கும் மாநில சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க உள்ளது.இரு அணிகளுக்கு மாவட்ட கபடி கழகம் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.பொருளாளர் ஆறுச்சாமி, புரவலர்கள் பிரேமா மணி, கோபால், வளர்ச்சிக்குழு தலைவர் கார்லிக் ராஜூ, இணை செயலாளர்கள் வாலீசன், சின்னு, செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் ரேவராஜ், தங்கராஜ், டெக்னிக்கல் கமிட்டி ரங்கசாமி, நடுவர் குழு கன்வீனர் சேகர், தண்டபாணி, செந்தில்முருகன், பயிற்சியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.