உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் அறிவிப்பு

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் அறிவிப்பு

உடுமலை: வறுமைக்கோட்டுக்கு கீழ்வசிக்கும் பெண்கள், ஈர மாவு அல்லது உலர்ந்த மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க, 50 சதவீத மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது: வறுமைக்கோட்டுக்கு கீழ்வசிக்கும் பெண்கள், ஈர மாவு அல்லது உலர்ந்த மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க, 50 சதவீத மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான இயந்திரங்களை வாங்க, 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.குறிப்பாக, விதவைகள், ஆதரவற்றவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.பயன்பெற விரும்புவோர், இன்று (23ம் தேதி) முதல், ஜூலை 14 வரை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஏழைப்பெண்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை