மாவட்டத்தில் வேளாண் சார்ந்த நிறுவனங்களுக்கு மானிய திட்டம்
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கபடுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், விவசாயம், கால்நடை, மீன்வளம் போன்ற பல்வேறு வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில், புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. புதிதாக துவங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதோடு, விற்பனை சந்தையை விரிவுப்படுத்த முயற்சிக்கும் புத்தாக்க நிறுவனங்களுக்கு, ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. புத்தாக்க நிறுவனம், 'டான்சிம்' மற்றும் 'ஸ்டார்ட் அப் இந்தியா' ஆகியவற்றில் பதிவு செய்திருக்க வேண்டும். இறுதி, 3 ஆண்டு லாபம், ரூ. ஐந்து இலட்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் பயனடைய, agrimark.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு ddab.gmail.comஎன்ற இ-மெயில் அல்லது வேளாண்மை துணை இயக்குநர், (வேளாண் வணிகம்) திருப்பூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.