உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் மின் மோட்டார் வாங்க மானிய திட்டம்

விவசாயிகள் மின் மோட்டார் வாங்க மானிய திட்டம்

உடுமலை, ; விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை வாயிலாக, மின் மோட்டார்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.சிறு, குறு விவசாயிகள் மின் மோட்டார் வாங்குவதற்கு, வேளாண் பொறியியல் துறை வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில், மூன்று ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், பாசனத்திற்கு நீர் இறைத்திட புதிய மின்மோட்டார், பம்ப் செட் வழங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்களை மாற்றி, புதியதாக வாங்கி பொருத்தவும் மானியம் வழங்கப்படுகிறது.ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக, ரூ.15 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்றிதழ், மூன்று ஏக்கர் நிலத்திற்கான அடங்கல்,கிணறு அமைந்துள்ள வரைபடம், மின் இணைப்பு அட்டை விபரம் மற்றும் வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் www.tnhorticulture.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் நுண்ணீர் பாசனத்திற்கு பதிவு செய்து பயனடைந்தவர்கள் அல்லது புதியதாக நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிப்பவர்கள், அதனுடன் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மின் மோட்டாருக்கான மானியம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.விருப்பமுள்ள விவசாயிகள், உடுமலை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தையோ, உதவி செயற்பொறியாளர், 96001 59870 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ